முகநூல் குழுவினரால் ஒப்புகைப் பட்டை வழங்கப்பட்ட முதல் தமிழ் அமைப்பு

Image



குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் முகநூல் பக்கம் அதிகாரப்பூர்வ பக்கம் (https://www.facebook.com/q8tic) முகநூல் குழுவினரால் (Facebook Team) சரிபார்க்கப்பட்டு ஒப்புகைப் பட்டை (Verified Badge) வழங்கப்பட்டுள்ளது.

முதல்முறையாக முகநூல் பக்கத்தின் ஓர் அமைப்பின் பெயர் தமிழிலேயே சரிபார்க்கப்பட்டு உறுதிசெய்யப்பட்டிருப்பது சிறப்பிற்குரியதாகும். அதுமட்டுமின்றி உலகளவில் இந்த அடையாளத்தை பெற்றிருக்கும் முதல் தமிழ் அமைப்பு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் மட்டுமே. எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே...!

சமூக வலைதளங்களை பொறுத்தமட்டில் பேஸ்புக் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பேஸ்புக்கில் அதிகாரப்பூர்வ பக்கம் உடைய பிரபலங்கள், ஊடகத்தினர், எழுத்தாளர்கள் போன்றோருக்கு புளூ டிக் (Blue Tick) வழங்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது குவைத் வாழ் மக்கள் மட்டுமல்லாது உலகெங்கும் வாழும் மக்களுக்கு மத, இன பாகுபாடின்றி கடந்த 16 ஆண்டுகளாக சேவை செய்து கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் முகநூல் பக்கம் தற்போது BlueTick வழங்கப்பட்டு அதிகாரப்பூர்வ கணக்காக உருவெடுத்துள்ளது.

தகவலுக்காக...‘நேஷனல் சைபர் சேஃப்டி அண்ட் செக்யூரிட்டி ஸ்டாண்டர்ட்ஸ்’ அமைப்பின் கூடுதல் தலைமை இயக்குநர் எஸ். அமர் பிரசாத் ரெட்டி கூறும்போது, “முகநூல், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில், பயன்படுத்தும் முக்கிய நபர்களின் பெயருக்கு அருகே நீல நிறத்தில் ஒரு டிக் குறியீடு இருக்கும். குறிப்பிட்ட நபர்தான் அந்த பக்கத்தை பயன்படுத்துகிறார் என்பதைச் சரிபார்த்து வழங்கும் குறியீடு அது. எனவே, அவ்வாறு உள்ள பக்கங்களை நம்பலாம். அதேபோல, பிரபல ஊடக நிறுவனங்களின் அசல் பக்கங்களை நம்பலாம். ஆனால், தனி நபர்கள் தங்கள் விருப்பு, வெறுப்பு அடிப்படையில் பகிரும் தகவல்களை, அப்படியே நம்பக்கூடாது. பாதிப்பை ஏற்படுத்தும் செய்தி என்றால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும் தயங்கக் கூடாது” என்றார்.

- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),

+965 9787 2482

www.k-tic.com