ஐநா ஆணையாளர் அறிக்கைக்கு இந்தியா ஆதரவு வழங்க மேண்டுமென நாடாளுமன்றில் வலுவான அழுத்தம் கொடுப்போம்!
கனடிய நீதிக்கான கூட்டமைப் கூட்த்தில் முனைவர் தொல்.திருமாவளவன் உறுதி!
சிறீலங்கா அரசை அனைத்துல குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும் என பரிந்துரைக்கும் ஐநா ஆணையாளரின் அறிக்கை பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது. கனடாவில் இயங்கும் 31 அமைப்புக்களை பிரிதி நிதித்துப்படுத்தும் 'கனடிய தமிழ் அமைப்புகளின் நீதிக்கான கூட்டமைப்பு' கனடிய அரசு சிறீலங்கா அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும் எனக் கோருகிறது. மேற்படி கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வண்ணம் கனடா வாழ் தமிழ்மக்களின் ஒரு இலச்சம் கையொப்பங்களை திரட்ட இவ்வமைப்பு திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது. இந்த திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு கடந்த வெள்ளிக் கிழமை (29.01.2021) அன்று இணைய வழியாக நடைபெற்றது.
முதல் கையெழுத்தை ஒன்றாரியோ மாகாண நடாளுமன்ற உறுப்பினர் திரு.லோகன் கணபதி அவர்கள் வைத்து தொடக்கி வைத்தார். அவர் தனது உரையில் இது ஒரு மாபெரும் கையெழுத்து இயக்கமாக மாறி கனடிய அரசுக்கு பெரும் அழுத்தம் கொடுத்து தமிழினத்துக்கு நீதி கிடைக்க உந்துதாலாக அமையவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் தனது உரையில் இலங்கையில் தமிழினத்துக்கு நடைபெற்றது கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பே! இதனை நிரூபிக்க அனைத்துலக விசாரணைவேண்டும். சிறீலங்கா அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த பரிந்துரைக்கும் அண்மைய ஐநா ஆணையாளரின் அறிக்கையை வரவேற்கிறேன். 2015 இல் சிறீலங்கா அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும் என 30 இலச்சத்துக்கும் அதிகமான கையெழுத்துகளை திரட்டி விடுதலைச் சிறுத்ததைகள் சார்பில் ஐநாவுக்கு அனுப்பியிருந்தோம். என உரையாற்றிய தொல்.திருமாவளவன் அவர்கள் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில். நான் மட்டும் அல்ல எங்கள் கட்சி பொதுச்செயலாளர் திரு.ரவிக்குமாரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார் இந்த கருத்தை ஆதரிக்க கூடிய பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அவர்களையும் இணைந்து இந்திய அரசு சிறீலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும் என்ற ஐநா ஆணையாளரின் அறிக்கைக்கு ஆதரவு வழங்கவேண்டும் என மத்திய அரசுக்கு ஒரு வலுவான அழுத்தம் நாடாளுமன்றில் கொடுப்போம் என்றார்.
மேற்படி நிகழ்வை கூட்டமைப்பை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொண்டுவரும் தமிழ்த்தாய் மன்றத்தின் பொருளாளர் திரு.ஞானம் அன்ரனி அவர்கள் நெறிப்படுத்தினார். மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக தலைவர், கூட்டமைப்பில் இடம்பெறும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், கீபெக் தமிழர் ஒன்றியம், கீயூபெக் தமிழர் முன்னேற்றச் சங்கம் போன்ற அமைப்புகளின் பிரதி நிதிகளும் உரையாற்றி இருந்தனர்.
www.ctcja.com
என்ற மேற்படி அமைப்பின் இணையத்தளத்துக்கு சென்று நீங்களும் கையெழுத்திடலாம்.
Raji Patterson