துபாயில் தமிழக காவல்துறை ஓய்வு பெற்ற அதிகாரிக்கு வரவேற்பு

Image


துபாய் : துபாய் நகருக்கு தமிழக காவல் துறையின் ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. எஸ். அப்துல் ரஹீம் மதுரையைச் சேர்ந்தவர் ஆவார்.

துபாய் நகருக்கு வந்திருந்த இவருக்கு தமிழ் பிரமுகர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

எய்ம்ஸ் கல்வி அறக்கட்டளையின் நிர்வாகிகள் திருச்சி பைசுர் ரஹ்மான், நத்தம் ஜாஹிர் ஹுசைன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

மேலும் சமூக ஆர்வலர் கல்லிடைக்குறிச்சி ஏ. முகம்மது மைதீன் குறித்து முக்கிய பிரமுகர்கள் வழங்கியுள்ள கருத்துரைகள் தொகுக்கப்பட்ட நூலை பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத் வழங்கினார். அதனைத் தொடர்ந்து பேசிய அப்துல் ரஹீம், அமீரகத்தில் வேலைகளில் இருந்து கொண்டு சமூகப் பணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் பைசுர், ஜாஹிர் உள்ளிட்ட குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார். குறிப்பாக தமிழக இளைஞர்கள் அரசு வேலைவாய்ப்பில் சிறப்பிடம் பெற வேண்டும் என முயற்சி மேற்கொண்டு வருவதற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும் இந்த பணியில் தன்னால் இயன்ற அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவதாக கூறினார்.

இந்த நிகழ்ச்சில் சென்னை தமீம் அன்சாரி, முதுவை தாஹா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.Muduvai Hidayath