தாய்நாடு திரும்ப முடியாமல் அமீரகத்தில் சிக்கி தவிக்கும் அமீரக வாழ் தமிழர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அமீரக திமுக அமைப்பின் அமைப்பாளர் அன்வர் அலி சார்பாக வேண்டுகோள்

Image


தாய்நாடு திரும்ப முடியாமல் அமீரகத்தில் சிக்கி தவிக்கும் அமீரக வாழ் தமிழர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய அவ்வமைப்பின் அமைப்பாளர் அன்வர் அலி கழகத்தின் தலைவர் அவர்களுக்கு பின்வருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனோ வைரஸ் காரணமாக உலகெங்கும் நிலவும் அசாதரன சூழ்நிலையை நீங்கள் அறிவீர்கள் ,குறிப்பாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கபட்டுள்ள ஏழை எளிய மக்களுக்காக அவர்களின் பசியினை போக்கும் பொருட்டு அவர்களுக்கு நிவாரணம் வழங்குதலில் தாங்கள் ஓய்வின்றி உழைப்பதை நாடே அறியும், இதற்கிடையில் தமிழக அரசு சில தினங்களுக்கு முன் தன்னார்வதொண்டர்கள், ஏழைகளுக்கு நேரடியாக உதவிகள் வழங்க கூடாது என்று சர்வாதிகார அறிவிப்பை வெளியிட்டு தமிழர்களின் உயிரிலும் உரிமையிலும் கைவைத்து தமிழர்கள் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியது , மறுதினமே தாங்கள் நீதிமன்றத்தின் கதவினை தட்டி தமிழக அரசின் சர்வதிகார அறிவிப்பிற்கு சம்மட்டி அடி கொடுத்து மக்களின் உரிமையை மீட்டு எட்டு கோடி தமிழக மக்களின் மனதில் நிரந்தர முதல்வராக வீற்று இருக்குறீர்கள்.

கோரோனோ நோய் தொற்றின் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் ஐந்து அரை லட்ச தமிழர்களும் கடினமான சூழ்நிலையில் இருந்து வருகிறார்கள் பெரும்பாலான அடிமட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பினை இழந்ததுடன் பலருக்கு ஆறு மாதங்கள் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது , ஊதியம் தரும் வேலையும் இல்லை தாய்நாட்டிற்கு திரும்பி வர விமானா சேவையும் இல்லை என்பதால் கையில் போதிய பணம் இல்லாமல் பலர் உணவின்றி வாடி வருகின்றனர் தங்களின் வழிகாட்டுதல் படி தங்களை பின்பற்றி சில தன்னார்வர் தொண்டர்கள் உதவியுடன் அமீரக திமுக சார்பாக ஒரு சில தொழிலாளர்கள் விடுதியில் தங்கியுள்ள தொழிலார்களின் உணவு தேவையை பூர்த்தி செய்து வருகிறோம் ,இதற்கிடையில் கொரோனோ தொற்று ஐந்தாயிரத்தை தாண்டி வருவதால் வேலையின்றி சிக்கி தவிக்கும் வெளிநாட்டினரை மட்டும் அந்த அந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பும் முடிவினை அமீரக அரசு எடுத்துள்ளது ,திருப்பி அனுப்படும் தொழிளார்களுக்கு முறையான சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் நோய்தொற்று இல்லை என்றால் மட்டுமே திருப்பி அனுப்பபடுவார்கள் என்றும் அமீரக அரசு திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறது இதற்காக சிறப்பு விமானங்களை இயக்கவும் தயாராகி வருகிறது ஆனால் இந்திய தூதரகம் மற்றும் மத்திய அரசு எந்த விதமான பதிலையும் இதுவரை அளிக்கவில்லை , நாட்டு மக்களை அமீரகத்தில் இருந்து பெற்றுகொல்வதில் ஒத்துழைக்காத நாடுகளுக்கு வேலைவாய்ப்பில் இனி முன்னரிமை வளன்கபடமாட்டது என்ற அறிவிப்பும் வெளியாகி மக்களை கவலையடைய செய்து இருக்கிறது

தமிழர்களின் பாதுகாப்பு அரணாக இயங்கி வரும் திராவிட முன்னேற்ற கழகம் வெளிநாடுகளில் தொழிற்சாலைகளில் அடிமட்ட தொழிலாளர்களாக பணிபுரிந்து தற்போது வேலையிழந்து சிக்கித்தவிக்கும் தமிழர்களின் விசயத்திலும் தலையிட்டு மத்திய அரசிற்கு அழுத்தங்களை கொடுத்து அவர்களின் சமூக பாதுகாப்பை உறுதிசெய்வதுடன் அவர்கள் பாதுகாப்புடன் நாடு திரும்ப வழிவகை செய்திட வேண்டும் என்று அமீரக வாழ் தமிழர்களின் சார்பாகவும் , அமீரக வாழ் திமுக அமைப்பின் சார்பாகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று அன்வர் அலி அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.