துபாயில் "எல்பின்" நிறுவன பங்குதாரர்களின் கூட்டம்

Image

துபாயில் "எல்பின்" நிறுவன பங்குதாரர்களின் கூட்டம் 6-3-2020 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் திருச்சியை தலைமையிடமாக்கொண்டு இயங்கிவருகிறது "எல்பின்" என்ற நிறுவனம். இதில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், உறுப்பினர்கள் பங்குதாரர்களாக உள்ளனர். இதுதவிர உலகின் பலநாடுகளில் வாழும் தமிழர்களும் இணைந்து வியாபார உறுப்பினர்களாக உள்ளனர். தன் பங்குதார்களை ஊக்குவிக்கும்பொருட்டு தமிழகத்திலிருந்து சுமார் 600 க்கும் அதிகமான பங்குதாரர்களை எல்பின் நிறுவனம் துபாய்க்கு அழைத்து வந்திருந்தது. துபாயில் எக்ஸ்லைசர் ஓட்டலில் நடைபெற்ற புத்தாக்க நிகழ்ச்சியில் துபாயிலிருந்தும் அதன் பங்குதாரர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து துபாய் பங்குதாரர் கூத்தாநல்லூர் அமீர் ஹம்ஜா கூறும்போது, " அதிகமான பங்குதாரர்களை ஒரே இடத்தில் சந்தித்திருப்பது மிக்க மகிழச்சியைத் தருகிறது. " என்று தெரிவித்தார். நிர்வாக இயக்குநர் திரு ராசா கூறும் போது, 'துபாய் பயணம் சிறப்பானதாக உள்ளது என்று குறிப்பிட்டார்.

Image

Kamal Basha , Dubai