ராசல் கைமாவில் இலவச மருத்துவ முகாம்

Image


ராசல் கைமா : ராசல் கைமாவில் உள்ள எமிரேட்ஸ் ஸ்டீவ் டோரிங் நிறுவனத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருவதை கட்டுப்படுத்தும் வகையில் இலவச மருத்துவ முகாம் மேற்கொள்ளப்பட்டது. இந்த மருத்துவ முகாம் அமீரக சுகாதாரம் மற்றும் தடுப்புத்துறையின் ஆதரவுடன் நடத்தப்பட்டது.

இந்த முகாமில் தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் கொரோனா குறித்து விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.

இதன் மூலம் 600 தொழிலாளர்கள் பயனடைந்தனர்.

இந்த முகாமுக்கான ஏற்பாடுகளை நலத்துறை ஒருங்கிணைப்பாளர் அகமது சுலைமான், சுகாதார அலுவலர் மனோஜ் பிரபாகரன், ஜஹாங்கீர் அமீர், இம்ரான் ஜெப்ரி உள்ளிட்ட குழுவினர் சிறப்புடன் செய்திருந்தனர்.

Image