முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் இரத்ததான நிகழ்வு

Imageஇனவழிப்பின் உச்சம் தொட்ட நாளான மே 18 ஈழத்தமிழர்களின் மனங்களில் நீங்காத வடுவாக 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் எம் சொந்தங்கள் கடந்து வந்த வலிகளை, இழப்புக்களை, வேதனைகளை வார்த்தையால் செல்லிவிட முடியாது.

ஆயினும் இப்பெருந்துயரை எண்ணி துவண்டு இருந்துவிடவும் முடியாது, தமிழின அழிப்புக்கு நீதி வேண்டி களமாடுவதே தற்போது உள்ள தேவையாகவும், இறந்தவர்களுக்கான பரிகாரமாகவும் இருக்க முடியும். அந்த வகையில் பல முனைகளில் நீதி வேண்டிய போராட்டங்கள் தாயக தேசங்களிலும் அதே போல புலம்பெயர் தேசங்களிலும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டே வந்திருக்கின்றன, வருகின்றன.

இந்த நாளினை நினைவு கூருவதோடு மட்டும் நின்றுவிடாது அவர்தம் ஆத்மாக்களின் கேள்விக்கான விடையை தேடி எம்மினத்தின் வலிகளை பிற இனத்தவர்களுக்கு உணர்த்த கண்காட்சியாகவும், அடையாள உண்ணாவிரதமாகவும், நீதிகோரிய நடைப்பயணமாகவும், நீதி கோரிய மிதிவண்டிப் பயணமாகவும், இரத்ததானம் என பல தளங்களில் நீதி வேண்டிய செயல் முனைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன.

அந்த வகையில் முள்ளிவாய்க்கால் வாரத்தில் உயிர் கொடுத்தவர்களுக்காய் உதிரம் கொடுப்போம் என்ற கருப்பொருள் தாங்கி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முள்ளிவாய்க்கால் வாரமான மே 12 தொடக்கம் 18 வரையான காலப்பகுதியில் இரத்ததான நிகழ்வு நடைபெறுவது வழமை.

அந்த வகையில் உயிர் கொடுத்தவர்களுக்காய் உதிரம் கொடுப்போம் என்ற கருப்பொருள் தாங்கி எம்மவர் நினைவு சுமந்து இரத்த தான நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

12ம் திகதி - Twickenham Regal House Blood Donor Centre, 14ம் திகதி - Liverpool Blood Donor Centre, 15ம் திகதி - Shephered Bush Blood Donor Centre, 16ம் திகதி - Brixton Blood Donor Centre, Nether-wood ALC Wombell Blood Donor Centre,

மே 18 - Stratford Blood Donor Centre ஆகிய இடங்களில் இரத்தான நிகழ்வு இடம்பெற்றிருந்து

இவ்வாறான குருதிக்கொடை நிகழ்வு 6வது தடவையாக பிரித்தானியாவில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

எம் இனத்தின் வலியை உலகிற்கு சொல்வோம் உலகின் காதுகட்கு கேட்கும் வரை எமது குரல் ஓயப்போவதுமில்லை, உலகத்தின் மனச்சாட்சிகளை திறக்கும் திறவு கோளாக ஒவ்வொரு தமிழனும் செயற்பட்டு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என உறுதியெடுத்துக் கொள்வோம்

Raji Patterson