ஷார்ஜாவில் பூமி நேரத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சி

Image


ஷார்ஜா : ஷார்ஜாவில் பூமி நேரத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக மாணவர்கள் பங்கேற்றனர்.

ஷார்ஜா அவர் ஓன் ஆங்கிலப் பள்ளிக்கூடத்தில் படித்து வரும் தமிழக மாணவர் ஹாரித் முஹம்மது பருவ நிலை மாறுபாடு குறித்து டிஜிட்டல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

தற்போது பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால் வீட்டில் உள்ள பால்கனியில் தோட்டம் அமைத்தும், வளர்ப்பு பிராணிகளை பராமரித்தும் வருகிறார். அவருக்கு அவருடைய பெற்றோர்கள் அபுபக்கர் மற்றும் ஜாஸ்மின் அபுபக்கர் ஆகியோர் உற்சாகம் அளித்து வருகின்றனர்.

இதேபோல் சார்ஜா ஜெம்ஸ் மில்லியனியம் பள்ளிக்கூடத்தில் 1-ஆம் வகுப்பு படித்து வரும் வர்ணித் பிரகாஷ் தனது நண்பர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி பூமி நேரத்தை அனுசரித்தார்.

Image