குவைத்தில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

Imageகுவைத் : குவைத் இந் திய தூதரகத்தின் பாதுகாப்பு மையத்தில் தொழிலாளர்கள் சிலர் தங்கியுள்ளனர். அவர்களது பாதுகாப்பை கருத்தில் கொண்டும், கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையிலும் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.

இந்த முகாமில் தொழிலாளர்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மருத்துவர்கள் ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டனர்.