துபாயில் பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

Imageதுபாய் : துபாய் நகரில் பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பள்ளிவாசல்கள் மற்றும் மைதானங்களில் சிறப்பு தொழுகை கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக சமூக இடைவெளியுடன் நடந்தது.

இந்த தொழுகையில் அமீரகத்தை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் கலந் து கொண்டனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பாரம்பரிய உடையில் பங்கேற்றனர்.