சௌதி அரேபியாவில் பக்ரீத் பெருநாள் சுற்றுலா

Imageஜெத்தா : சௌதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பக்ரீத் பெருநாளையொட்டி நீண்ட பொது விடுமுறை விடப்பட்டிருந்தது.

இதன் காரணமாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது உறவினர்களைக் காணவும், வரலாற்றுப் பாரம்பரியமிக்க இடங்களை பார்வையிடவும் சென்றனர்.

இதன் ஒரு பகுதியாக சமூக ஆர்வலர் தூத்துக்குடி சம்சுதீன் தலைமையில் பத்தமடை மற்றும் பார்த்திபனூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களைச் சேர்ந்தவர்கள் சௌதி அரேபியாவின் ஜீஷான் நகர் தொடங்கி ஜெத்தா, மதிநா நகர் ஆகிய நகரங்களுக்கு சென்றனர்.

அப்போது அந்த பகுதியில் உள்ள பாரம்பரிய பள்ளிவாசல்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களையும் பார்வையிட்டனர்.

இதனால் விடுமுறையில் ஒரு புத்துணர்வு ஏற்பட்டதாகவும், புதிய இடங்கள் குறித்த வரலாற்று தகவல்களையும் தெரிந்து கொள்ள உதவியாகவும் இருந்ததாகவும் இதில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.