சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய பெற்றோர்களுக்கான இலவச பயிலரங்கு

Image



சிண்டாவின் ஆதரவில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) சென்ற ஞாயிற்றுக்கிழமை 29-08-2021 அன்று காலை மணி 10.00 முதல் பகல் 12.30 மணி வரை “NURTURING PARENTS, BRIDGING TEENS” என்ற தலைப்பில் பெற்றோர்களுக்கான இலவச பயிலரங்கை இணையம் வழியாக மிகச் சிறப்பாக நடத்தியது.

பெற்றோர்கள் மற்றும் இளையர்களுக்கான பயிலரங்குகள் நடத்துவதிலும் சமூக சேவையிலும் 15 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்த பயிற்றுவிப்பாளர்களாகிய திருமதி ஜகஜித் கார் மற்றும் திரு மணிவண்ணன் இருவரும் இணைந்து இப்பயிலரங்கை நடத்தி, பெற்றோர்களுக்கான சிறந்த ஆலோசனைகளும் இளையர்களை புரிந்துகொண்டு இணக்கமான நல்லுறவை மேம்படுத்தும் வழிகளையும் எடுத்துரைத்தனர். கேள்வி பதில் அங்கமும் இடம்பெற்றது. சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு ரா. அன்பரசு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வழங்கிய வாழ்த்துரையில் “பிள்ளைகளின் ஆர்வத்தையும் திறமைகளையும் கண்டறிந்து பெற்றோர்கள் பிள்ளைகளை ஊக்குவிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார். சங்கத்தின் தலைவர் முனைவர் மு. அ. காதர் வரவேற்புரை வழங்கினார். சங்கத்தின் செயலாளர் கணிதப் பேராசிரியர் திரு அமானுல்லா நன்றியுரை கூறினார். சங்கத்தின் உறுப்பினர்களும் பொதுமக்களும் இப்பயிலரங்கில் கலந்துகொண்டனர்.