பஹ்ரைனில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி

Imageமனாமா (பஹ்ரைன்) : பஹ்ரைன் நாட்டின் தலைநகர் மனாமாவின் சல்மாபாத் அல் ஹிலால் மருத்துவமனையில் டாக்டர் பி.வி.செரியன் தலைமையில் "புற்றுநோய் பராமரிப்பு குழுவின்" மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் 22.10.2021 வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது.

பஹ்ரைன் நாட்டின் பாராளுமன்ற உறுப்பபினர் டாக்டர் மசூமா அப்துல் ரஹீம் பிரதம விருந்தினராக கலந் து கொண்டார். அவர் தனது உரையில் மருத்துவமனையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நற்பணிகளை பாராட்டினார்.

Imageஅல் ஹிலால் மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் சரத் சந்திரன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

அல் ஹிலால் மருத்துவமனையின் மகளிர் மருத்துவ நிபுணர் மற்றும் ஆலோசகருமான டாக்டர் ரஜனி ராமச்சந்திரன் மார்பகப் புற்றுநோய் பற்றி விரிவாகப் பேசினார். கருத்தரங்கில் டாக்டர். சரத் சந்திரன் வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் புற்றுநோய் பராமரிப்பு குழு உணவு பொட்டலங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினர்.

லைட்ஸ் ஆஃப் கைன்ட்னெஸ் அமைப்பின் உறுப்பினர்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு பணிகளை சிறப்புற மேற்கொண்டனர்.