மாமறையோர் மருந்து

Imageதிருமறையே மருந்தென்று
தெரியுமா செகத்தீரே !
அருள் நபியின் வாழ்வியல்
அதன் விளக்கம் அறிவீரே !

விக்ரஹ வணக்கமென்னும்
விழுப்புண்ணாம் தீக்காயம் !
துப்புரவு ஆவதற்கு
தூயமறையே மருந்தாகும் !

தொலையாப் பெரும் பிணிக்கும்
தொடர்கின்ற வன்பிணிக்கும்
எழிலார் திருமறையே
ஏற்புடைய மருந்தென்பேன் !

இதய நோய்க்கும் குர்ஆனே
இனியதோர் மருந்தெனலாம் !
மதுர மறையின் வாசகங்கள்
மருந்தாய் மின்னும் சாசனங்கள் !

மன்னிப்பு வழங்கிவிடு !
மனக்காயம் ஆறிவிடும் !
எண்ணிக்கொள் மானிடனே !
என உணர்த்தும் மறை மருந்து !

தொழுகையே மருந்தென்று
தூயநபி உரைத்திடுவார்
எழிலாய் சுகம் காண
எல்லோரும் பேணிடுவீர் !

நாற்பெத்தெட்டு முறை
ஆயத்துல் குர்ஸியை
நலமாய் நாமோத
நகரும் எல்லா நோய்களென
நல்லார் உரைத்திடுவர் !

மூல நோயின் முற்றல் தணிய
ஸூரா தஹரை ஓதுதல் நலமே !

காய்ச்சலின் கடுமை
கழன்று வீழ
ஸூரா இன்பிதார்
துணையாய் அமையும் !

விஷப் பூச்சிக் கடி
வேதனை நீங்க ….
ஸூரா இன்ஷிகாக்
ஓதுங்கள் போதும் !

கால்கள் வலியா ….. உங்களுக்கு ?
கவலை வேண்டாம் ! குர் ஆனின்
ஸூரா அஃலாவை ஓதிடவே
சுகமே காண்பீர் மானிடரே !

மூத்திரக் கோளாறா …….?
முகம் சுளிக்க வேண்டாமே !
ஸூரா பல்(த்)தை ஓதிடுவீர்
சுகமே தெரியும் உணர்ந்திடுவீர் !

மயக்கமே வந்து
மனதில் கலக்கமோ….?
தயக்கம் வேண்டாம்
ஓதுவீர் ஸூரா ஷம்ஸே !

கக்குவான் இருமல்
கடும் வயிற்று வலியும் குணம் பெற வேண்டுமெனில்
குறித்துக் கொள்ளுங்கள்
ஸூரா இன்ஷிராஹை
ஓதி ஊதினால்
ஜோராய் குணமே
தெரியும் ஆமாம் !

உடம்பில் அரிப்பா…?
சொறிகள் சிரங்கா …?
கவலை வேண்டாம்
ஸூரா கத்ரை
இறையருள் வேண்டி
இனிதாஅய் ஓதக்
குறையெலாம் தீரும் !
குற்றமும் நீங்கும் !

வாத நோயின்
வாட்டம் தீர
ஸூரா ஸில்ஸால்
சீராய் ஓதுவீர் !

ஐயோ …….. தலைவலி
என்றே பயமா ……?
ஸூரா அஸ்ரை
ஓதிட நலமே !

கண்நோய் நீங்கக்
கவலை வேண்டாம்
ஸூரா ஹுமஸா
ஓதியே தொடரக்
கோரிய பலன்கள்
கோடி கிடைக்கும் !
காரியசித்தி
கண்டிப்பாய் நடக்கும் !

ஸூரா குறைஷை
ஓதினால் போதும்
யார்க்கும் சிறுநீரகக்
கோளாறில்லை !

ஸூரா கவ்தர்
கண்வலி போக்கும் !
ஸூரா இஃலாஸ்
இருமலை நீக்கும் !

வாரீர் வாரீர்
திருமறை யோதி
வாட்டம் தீர்த்து
வளமே காண்போம் !

தீனே மருந்தாகும்
தீன் தந்த மறையினிலே
தேனும் மருந்தாகும்
பொய்யில்லை கண்டீரே !

ஹாஜி மு. ஹிதாயத்துல்லா இளையான்குடி