குவைத்தில் ஆயுர்வேத நாள் அனுசரிக்கப்பட்டது

Imageகுவைத் : குவைத் நாட்டின் இந்திய தூதரகத்தின் சார்பில் ஆயுர்வேத மருத்துவம் குறித்து அந்த நாட்டை சேர்ந்தவர்களுக்கும், அங்கு வசித்து வரும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் ஆயுர்வேத தினம் அனுசரிக்கப்பட்டது.

இதனையொட்டி ஆயுர்வேதம் குறித்த தகவல்கள் கொண்ட நூலை இந்திய தூதர் சிபி ஜார்ஜ் வெளியிட்டார். மேலும் யோகா குறித்த நிகழ்ச்சியும் நடந்தது.

பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியை காணொலி வழியாக பார்வையிட வசதி செய்யப்பட்டிருந்தது.