ஷார்ஜாவில் எழுத்தாளர் முருகேஸ்வரி ராஜவேலின் நூல்கள் வெளியீடு

Image



ஷார்ஜா : ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் உள்ள நூல் அரங்கில் திண்டுக்கல் நகரைச் சேர்ந்த எழுத்தாளர் முருகேஸ்வரி ராஜவேலின் இலக்கியச் சாரல் மற்றும் மரபு மலர்கள் ஆகிய இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டது.

இந்த நூல்களை இந்திய துணை தூதரக அதிகாரி கே. காளிமுத்து வெளியிட்டார். நூல்களை சமூக ஆர்வலர்கள் டாக்டர் ஜெயந் தி மாலா சுரேஷ், முஹம்மது தாஹா, இந்திய வர்த்துகத்துறை அதிகாரி சுனில் குமார், முதுவை ஹிதாயத் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். மேலும் பிரபல எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனுக்கும் தனது நூலை வழங்கினார்.

அதனையடுத்து இந்திய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறையின் புத்தக வெளியீட்டு அரங்கில் வைக்கப்பட்டுள்ள பார்வையாளர் புத்தகத்தில் முருகேஸ்வரி ராஜவேல் தனது கருத்துக்களை பதிவிட்டார். பிறகு இந்திய அரசின் நேஷனல் புக் டிரஸ்ட் உள்ளிட்ட அரங்குகளையும் பார்வையிட்டார். இந்த புத்தக கண்காட்சி இலக்கிய ஆர்வலர்களை சந்திக்க கூடிய ஒரு வாய்ப்பாக இருப்பதாகவும், இங்கு தமிழ் புத்தக அரங்கு இருப்பதும் பெருமையளிப்பதாக அவர் தெரிவித்தார்.