துபாயில் நடந்த ரத்ததான முகாம்

Imageதுபாய் : துபாய் இந்திய துணை தூதரகத்துடன் இணைந்து பிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பு அமீரகத்தின் 50 வது ஆண்டு தேசிய தினத்தையொட்டி சிறப்பு ரத்ததான முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த முகாமில் இந்திய துணை தூதரக அதிகாரி சஞ்சய் குப்தா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

உயிர்காக்கும் ரத்ததானத்தை பலர் ஆர்வத்துடன் செய்தனர். ரத்ததானம் செய்தவர்கள் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இந்த பணியில் தன்னார்வலர் பலர் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.