அஜ்மானில் நடந்த ரத்ததான முகாம்

Imageஅஜ்மான் : அஜ்மான் லூலூ செண்டர் அருகில் அமீரகத்தின் 50வது ஆண்டு தேசிய தினத்தையொட்டி ரத்ததான முகாம் நடந்தது.

அமீரக சுகாதாரம் மற்றும் தடுப்புத்துறை ஆதரவுடன் கோலாலம்போ நண்பர்கள் அமைப்பு இந்த ரத்ததான முகாமுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்திருந்தது.

உயிர்காக்க உதவும் இந்த ரத்ததான முகாமில் பலர் ஆர்வத்துடன் வந்து தன்னார்வத்துடன் ரத்ததானம் செய்தனர்.