துபாயில் பள்ளிக்கூட மாணவர்கள் எழுதிய கதை தொகுப்பு நூல் வெளியீடு

Image



துபாய் : துபாய் அல் மன்கூல் நூலகத்தில் பள்ளிக்கூட மாணவர்கள் எழுதிய கதை தொகுப்பு கொண்ட ‘தி ஸ்டோரி கார்ட்’ என்ற ஆங்கில நூல் வெளியிடப்பட்டது.

விமெண்டர் என்ற பயிற்சி நிறுவனம் ஐந்து பெண்களை கொண்டு நடத்தப்படுகிறது. இந்த பயிற்சி நிறுவனம் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைத்து வயதினருக்கும் பல்வேறு வகையான பயிற்சிகளை ஆன்லைன் மூலம் வழங்கி வருகிறது.

இந்த பயிற்சியில் முதலாவது 6 வயது முதல் 9 வயதுடைய மாணவ, மாணவியருக்கு கதை எழுதும் பயிற்சி வழங்கப்பட்டது. இந்த கதைகளை தொகுத்து ‘தி ஸ்டோரி கார்ட்’ என்ற ஆங்கில நூல் வெளியிடப்பட்டது.

இந்த நூலை சாந்தி இண்டர்னேசனல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், செரனிடி ஹாலிடேஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநருமான டி.என்.கிருஷ்ணகுமார் வெளியிட ஷார்ஜா டெல்லி பிரைவேட் பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியை பிரபா சுந்தர் பெற்றுக் கொண்டார். இந்த நூலை பெற விரும்புவோர் அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் தளங்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த பயிற்சியை பெற்று வரும் அடுத்த பிரிவு மாணவர்கள் அடுத்த மாதம் ஜனவரி 2022 ல் தங்களது பயிற்சியை நிறைவு செய்வார்கள்.

இந்த நூல் வெளியீட்டு விழாவில் மாணவ, மாணவியர், அவர்களது பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.