இந்தியர்களை அழைத்து வர துபாய் விரைகிறது இந்திய போர்க்கப்பல்

Image



உலக அளவில் பெரும் பாதிப்பபை ஏற்படுத்தியுள்ளது கொரோனே வைரஸ்.

கோரோனா பாதிப்பால் உலக நாடுகள் தங்கள் விமான சேiவைய முடக்கிவிட்டன. இதனால் தங்களது நாடுகளுக்கு செல்ல இயலாமல் பல நாட்டவர் தவித்து வருகின்றனர்.

வேலைவாய்ப்பின்மை மற்றும் மருத்துவ பாதுகாப்பு உள்ளிட்டவைகளுக்காக தங்கள் நாடுகளுக்கு செல்ல அந்தந்த நாட்டு குடிமக்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

அவர்கள் மீட்க அந்தந்ந நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு சிறப்பு விமானத்தை இயக்கமுனைப்பு காட்டி வருகின்றன.

அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிந்துவரும் இந்தியர்கள், இந்தியா செல்ல விரும்புபவர்கள் எத்தனை பேர் என்று அறிய துபாய் இந்திய தூதரகம் https://cgidubai.gov.in/covid_register/ என்ற வலைதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தியது. அதன்படி சுமார் 2 இலட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் விருப்பத்தைத்தெரிவித்திருந்தனர். இதில் அதிகமானோர் கேரள மாநிலத்தைச் சேந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை அடுத்து, இந்திய அரசு அமீரகத்தில் வாழும் இந்தியர்களை அழைத்துக்கொள்ள இந்திய தூதரகத்தின் மூலம்; ஏற்பாடு செய்தது. அதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக நாளை (வியாழக்கிழமை 07-05-2020) முதல் அபுதாபி மற்றும் துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் கேரளாவுக்கு இயக்கப்பட உள்ளன.

இந்த விமானங்கள் கொச்சி மற்றும் கோழிக்கோடு ஆகிய இடங்களுக்கு பயணிகளை ஏற்றி செல்ல உள்ளது.

நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) துபாயில் இருந்து இரண்டு விமானங்கள் சென்னைக்கு இயக்கப்பட உள்ளன. இந்த விமானங்களில் ஒரு முறைக்கு தலா 200 பேர் சமூக இடைவெளி இல்லாமல் ஏற்றி செல்லப்படுவார்கள்.

இந்த நிலையில் அமீரகத்தில் இருந்து இந்தியா திரும்புவதற்கான முன்பதிவு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தாயகம் திரும்ப நினைப்பவர்கள் உடனடியாக முன்பதிவு செய்துகொள்ளுமாறும் இந்திய துணைத்தூதர் விபுல் அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் விவரங்கள் மற்றும் முன்பதிவுகளுக்கு ஆரோக்கிய சேது செயலி, 050-899-5583 என்ற இந்திய தூதரக உதவி எண், 056-546-3903 மற்றும் 054-309-0575 ஆகிய துணைத்தூதரக உதவி எண், help.abudhabi@mea.gov.in மற்றும் cons2.dubai@mea.gov.in ஆகிய இ-மெயில் முகவரி போன்றவற்றை தொடர்பு கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

KAMAL BASHA
FROM DUBAI