ஓட்டுநர் உரிமம் வழங்கல்

Imageசிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவியருக்கு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர் பயிற்சி கல்லூரி நேரத்தில் அளிக்கப்படுகிறது.

25/09/2022 அன்று கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற்ற 17 மாணவிகளுக்கு ஓட்டுநர் உரிமத்தை வழங்கினார்.

அருகில் ஒருங்கிணைப்பாளர் முனைவர் K.A. செய்யது அபுதாஹிர்.

இத்திட்டம் தொடங்கிய நாள் முதல் இதுவரை 895 மாணவ-மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் ஓட்டுனர் பயிற்சி பெற்று ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளனர்.

மிக குறைத்த கட்டணத்தில் ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு சிவகங்கை, வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் ஓட்டுநர் உரிமம் பெற்று தரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.