அமீரகத் தமிழ் பெண்கள் விருது பெற்றனர்

Image

துபாய் : சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை நந்தவனம் பவுண்டேஷன் நிறுவனம் நடத்திய சாதனை பெண்கள் 2020 விருது வழங்கும் நிகழ்வு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் அரங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (8.3.2020) காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் சர்வ தேச அளவில் வெவ்வேறு நாடுகளிலிருந்து இருபது பெண்கள் தேர்வு செய்யப்பட்டு சாதனைப் பெண்கள் என்று கெளரவிக்கப் பட்டார்கள். அதில் அமீரகத்தில் இருந்து அபுதாபி கிரீன் பீல்ட் நர்சரிப் பள்ளியின் இயக்குனர் ஸ்ரீதேவி, உலகத் தமிழாராய்ச்சி ஆய்வாளர் டாக்டர் ஸ்ரீ ரோகிணி அவர்களுக்கும் சமூக சேவைக்கான சாதனைப் பெண்கள் 2020 விருது வழங்கி சிறப்பித்தார்கள்.

Image

Muduvai Hidayath