துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகக் குழு கூட்டம்

Imageதுபாய் : துபாய், அன்னபூர்ணா ஓட்டலில் 28.10.2022 வெள்ளிக்கிழமை மாலை திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அமீரகப் பிரிவின் நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு சங்க தலைவர் பூதமங்கலம் அல்ஹாஜ் ஜியாவுதீன் தலைமை வகித்தார்.

பொதுச்செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். கூட்டத்தில் முன்னாள் மாணவர்களின் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்துவது, அமீரக தேசிய தினத்தையொட்டி சந்திப்பு நிகழ்ச்சி மேற்கொள்வது, ரத்ததான முகாம், மருத்துவ முகாம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை தொடர்ந்து மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பரமக்குடி, அன்னை ஆயிஷா அறக்கட்டளை நிறுவனர் அல்ஹாஜ் அப்துல் கஃபூர் பொன்னாடை மற்றும் நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

இந்த கூட்டத்தில் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அப்துல்லா பாஷா, முதுவை ஹிதாயத், மன்னர் மன்னன், அலாவுதீன், பெரோஸ் கான், பஜ்ருதீன், மதுக்கூர் ஜாபர் சாதிக், முகம்மது நவாசுதீன், சகுபர் சாதிக், அப்துல் கனி, பரக்கத், காமில், இந்திய நலவாழ்வு பேரவையின் துணை தலைவர் ஏ.எஸ். இப்ராஹிம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.