அல் அய்ன் இந்திய சமூக நல மையத்துக்கு பாராட்டு

Imageஅல் அய்ன் : அல் அய்ன் நகரில் அபுதாபி போலீசார் நடத்தி வரும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தும் போது பொது மக்கள் அதிக அளவில் அதில் பங்கேற்க அல் அய்ன் இந்திய சமூக மையம் முக்கியமான பணியை மேற்கொண்டது.

இதன் காரணமாக போலீஸ் தலைமை அலுவலகத்தில் அதிகாரி முகத்தம் சைப் முகம்மது அல் அமெரி, அல் அய்ன் இந்திய சமூக மையத்தின் தலைவர் கீழக்கரை முபாரக் முஸ்தபாவுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் போலீஸ் அதிகாரி காலித் அல் அஜீசி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதன் மூலம் இத்தகைய கவுரவத்தை பெற்ற ஒரே பொது அமைப்பு என்ற பெருமையை அல் அய்ன் இந்திய சமூக மையம் பெறுகிறது.