ஷார்ஜாவில் பள்ளிக்கூட குழந்தைகள் எழுதிய இரண்டு கதை நூல்கள் வெளியிடப்பட்டது
ஷார்ஜா : ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் நடந்து வரும் 41வது சர்வதேச புத்தக கண்காட்சியில் பள்ளிக்கூட குழந்தைகள் எழுதிய இரண்டு கதை நூல்கள் வெளியிடப்பட்டது.
ஷார்ஜாவில் வி மெண்டர் என்ற ஆன்லைன் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மாணவ, மாணவியரின் திறமைகளை வெளிப்படுத்த பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.
அபிவிர் சிங், அனிகா ஆர் நாயர், ஜென்னா மன்சூர், மக்ரீன் பாஷா, முஹம்மது சயான், சமாரா தவானி,உஜ்வல் விஜய் உள்ளிட்ட மாணவர்களின் முதலாவது கதை தொகுதியும்,
அனயா தாஸ், ஜடின் நக்வானி, மீரா ராகுல், அதிதி சரூண், அய்டன் சிம்ப்சன், சவுர்யா ஜெய்ன், அனிகா ஆர் நாயர், அனன்னா டினைஸ் யில்டிரிம் ஆகிய மாணவர்களின் இரண்டாவது கதை தொகுதியும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது.
இந்த நூலை அமீரகத்தின் நல்லெண்ண தூதர் லைலா ரகல் எல் அப்தானி வெளியிட மாணவ, மாணவியர் பெற்றுக் கொண்டனர்.
சமூக ஆர்வலர்கள் எம்.ஜி. உமா, ரீமா மகாஜன், எழுத்தாளர் அன்னா மரியா ரொன்கா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பு பணிகளை ஜெயஸ்ரீ மேனன் சத்யநாராயணன் உள்ளிட்ட குழுவினர் சிறப்புடன் செய்திருந்தனர்.
இது குறித்து ஜெயஸ்ரீ மேனன் சத்யநாராயணன் கூறியிருப்பதாவது : ஷார்ஜா அரசு குழந்தைகளின் திறமைகளை வெளிப்படுத்த சிறப்பான வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறது. இதன் மூலம் அந்த குழந்தைகளை ஒரு ஹீரோவைப் போல் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்றார்.