மஸ்கட்டில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானம்

Imageமஸ்கட் : மஸ்கட்டில் இருந்து சென்னைக்கு 02.07.2020 வியாழக்கிழமை வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானம் இயக்கப்பட்டது.

இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் கர்ப்பிணிகள், வயதானவர்கள், வேலை இழந்தவர்கள் என பலரும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக ஓமன், இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் இத்தகைய சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்துள்ள இந்திய தூதரகத்துக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.