புதிய முதல்வர் பதவியேற்பு

Image



சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் 01.06.2023 முதல் முதல்வராக பணியாற்றிய முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் 31.05.2023 அன்று பணிஓய்வு பெற்றதையடுத்து வேதியியல் துறைத்தலைவர் திரு. S.E.A. ஜபருல்லாஹ் கான் அவர்கள் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

கல்லூரி ஆட்சிக்குழு செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான் மற்றும் உறுப்பினர்கள் ஜனாப் J. அபூபக்கர் சித்திக், ஜனாப் A. உஸ்மான் அலி ஆகியோர் முன்னிலையில் ஆட்சிக்குழு தலைவர் ஜனாப் S.M. அஹமது ஜலாலுதீன் அவர்கள் புதிய முதல்வர் பணிநியமன ஆணையை வழங்கினார்.

கல்லூரி துணைமுதல்வர், சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர், டாக்டர் சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி முதல்வர், துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.