துபாயில் நட்சத்திரக் கலைவிழா

Image

ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் நடசத்திரக் கலைவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. துபாயில் செயல்பட்டுவரும் "யெஸ்ஈவெண்ட் " நிறுவனத்தின் சார்பில் தமிழர்களை மகிழ்விக்கும் "நட்சத்திரக் கலைவிழா " நேற்று வியாழக்கிழமை ஷேக் ராசித் கலையரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழகத்தில் இருந்து நடிகர் சுப்பு, நடிகர் அசாருதீன், சின்னத்திரை பிரபலங்கள் அரவிந்த், சவுந்தர்யா, இசைக்கலைஞர்கள், லிடியன், சாய்சரண், சின்னத்திரை பாடல் போட்டியில் வெற்றி பெற்ற ரிதிஸ், உள்ளிட்ட கலைஞர்கள் பங்கு கொண்டனர். துபாயில் வசிக்கும் தமிழ்பாடகர்கள் கங்கா, கார்த்தி உள்ளிட்டோரும் இக் கலைவிழாவில் தங்கள் பங்களிப்பை அளித்தனர். இந்நிகழ்வை ஆர்.ஜே. அஞ்சனா, ஆனந்த் மற்றும் பேராசிரியை லக்ஷ்மி பிரியா ஆகியோர் தொகுத்து வழங்கினர். துபாய் கராமா ஸ்டார் பிரியாணி,, கில்லி ரேடியோ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் ஆதரவளித்திருந்தன. கொரானா வைரஸ் பீதிக்குமிடையில் அமீரகத்தின் பல பகுதிகளிலும் இருந்து ரசிகர்கள் கலந்து கொண்டு ரசித்தனர். நிகழ்ச்சியை வெங்கட், ஆனந்த மற்றும் யெஸ் ஈவெண்ட் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்

Image

Kamal Basha ,Dubai