பிளஸ் டூ வணிகவியல் பாடத்தில் துபாய் தமிழக மாணவி அமீரக அளவில் முதலிடம் பிடித்து சாதனை

Image



துபாய்:பிளஸ் டூ வணிகவியல் பாடத்தில் துபாய் தமிழக மாணவி தஸ்னீம் அபுதாஹீர் அமீரக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இவர் துபாயில் உள்ள டெல்லி பிரைவேட் ஸ்கூலில் (DPS-Dubai) பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். சமீபத்தில் தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த பொது தேர்வில் 97.8 % மதிப்பெண்கள் பெற்று வணிகவியலில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்

முதலிடம் பெற்ற தஸ்னீமிற்கு பள்ளியின் தாளாளர் தினேஷ் கோத்தாரி,முதல்வர் ராஷ்மி, துணை முதல்வர் ரச்சனா, ஓவிய ஆசிரியர் உமா, ,டாமி பள்ளியின் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ஏற்கனவே,ஓவியத்தில் சர்வேதேச விருதுகள் பல வென்ற இவரின் திறமைகளை பாராட்டும் விதமாக மேதகு துபாய் ஆட்சியாளர் மேதகு ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்களின் கல்வி சலுகை திட்டத்தின் கீழ் துபாயில் இயங்கிவரும் அமெரிக்க பல்கலை கழகம் (AUD)இவருக்கு 50% கல்விச்சலுகை வழங்கி சிறப்பித்திருப்பது குறிப்பிட தக்கது.

இவரது திறமையை கருத்தில் கொண்டு தஸ்னீம் அபுதாஹீர் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த வானொலியின் சுற்றுச்சூழல் துறையின் நிருபராக செயல்பட்டு வருகிறார்.

இவர் சிவகெங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்தவர் ஆவார். இவரது தந்தை செய்யது அபுதாஹிர் வர்த்தக நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். தாயார் மஹபத் நிஷா இல்லத்தரசி. இவருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர்.

சிறப்பிடம் பெற்ற தஸ்னீம் அபுதாஹீரை வேலூர் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முதன்மை துணை தலைவருமான எம். அப்துல் ரஹ்மான், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ் கனி, இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் தலைவர் முனைவர் சேமுமு. முகமதலி, பவர்புளோ குழுமத்தின் இயக்குநர் கல்லிடைக்குறிச்சி ஆ. முகமது மைதீன், ஈமான் சங்கத்தின் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.