பஹ்ரைனில் தீபாவளி
மனாமா : பஹ்ரைனில் உள்ள குறைந்த வருமானம் பெறும் தொழிலாளர்களுக்கு இடைவிடாத உணவு மற்றும் சிற்றுண்டிகள் வழங்குதலின் ஒரு பகுதியாக, 'லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ்' (சமூக உதவி இயக்கம்) சல்மாபாத் பகுதியில், குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்கள் தங்குமிடத்தில் தீபாவளியைக் கொண்டாடியது.
நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு இரவு உணவுப் பொட்டலங்கள், இனிப்புகள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை விநியோகித்தோம்.
தீபத் திருவிழாவின் மகிழ்ச்சியான நிகழ்ச்சியில் சமூக சேவகர்களான பைசல் எஃப் எம், காத்து சச்சிந்தேவ், மூர்த்தி மற்றும் லைட்ஸ் ஆஃப் கைன்ட்னஸின் பிரதிநிதிகள் ஃபசலுர் ரஹ்மான் மற்றும் சையத் ஹனீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.