துபாயில் இந்திய பிரதமருக்கு உற்சாக வரவேற்பு
துபாய் : துபாய் நகரில் நடந்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை உச்சிமாநாட்டில் பங்கேற்க 30.11.2023 அன்று இந்திய பிரதமர் மோடி துபாய் நகருக்கு சிறப்பு விமானத்தில் வந்தார்.
அவருக்கு விமான நிலையத்தில் அமீரக அரசின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து துபாய் நகரின் பால்ம் ஜுமைரா பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்திய துணை தூதரகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினர் உற்சாக வரவேற்பை பிரதமர் மோடிக்கு அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டனர். பிரதமர் மோடி அவர்களின் அருகில் நேரில் சென்று நலம் விசாரித்தார். அப்போது பெரும்பாலோர் ஸ்மார்ட் போன் மூலம் செல்ஃபி எடுப்பதில் அதிக கவனம் செலுத்தினர்.
மேலும் பல்வேறு உலக தலைவர்களையும் பிரதமர் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.