மகளிர் தின விழா

Image



சர்வதேச மகளிர் தினம் முன்னிட்டு 09.03.2024 அன்று சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

தமிழ்த்துறை உதவிப்பேராசிரியை முனைவர் ஷிபா வரவேற்றார். கல்லூரி செயலர் ஜனாப் V.M. ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார்.

கல்லூரி முதல்வர் திரு. S.E.A. ஜபருல்லாகான், சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் முனைவர் A. சபினுல்லாகான், டாக்டர் சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி முதல்வர் திரு. M.M. முஹம்மது முஸ்தபா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

உதவிப்பேராசிரியை முனைவர் M. பிவுஜியா சுல்த்தானா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.

சிறப்பு விருந்தினராக மதுரை, செந்தமிழ்க்கல்லூரி, தமிழ்த்துறை இணைப்பேராசிரியர், துணைமுதல்வர் முனைவர் ரேவதி சுப்புலக்ஷ்மி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இறுதியாக உதவிப்பேராசிரியை திருமதி R. செய்யது அலி பாத்திமா நன்றி கூறினார். நிகழ்வில் இளையான்குடி பிரமுகர் ஜனாப் S.N.S. அயூப் கான், கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் ஜனாப் A. ஹமீத் தாவூத், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர்