புதுவை முதல்வர் திரு. நாராயணசாமி அவர்களை பாராட்டி அமீரக காங்கிரஸ் தீர்மானம்.

Image

05-03-2020 துபையில் அமீரக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தலைவர் அப்துல் மாலிக் தலைமையில் நடைபெற்றது. செயற்குழு கூட்டத்தை பொருளாளர் கீழை ஜமீல் முஹம்மது துவக்கி வைத்தார். அதில் அவர், நம் நாட்டில் நடைபெறும் கவலை நிறைந்த விடயங்களையும் நம் காங்கிரஸ் செயல்படுத்த வேண்டிய விடயங்களை விரிவாக விவரித்தார். அதன் பிறகு தலைவர் மாலிக், துணைத் தலைவர்கள் சிந்தா, ஜெஹன்,பொதுச்செயலாளர் பீர் முஹம்மது, செயலாளர் அப்துல் காதர் ஜெய்லானி ஆகியோர் நம் அமீரக காங்கிரஸ் செயல்பாடுகள், திட்டங்கள் குறித்தும் விவாதித்தனர். துணைத் தலைவர்கள் பொதக்குடி ஜுனைத், தேங்கை ஸாதிக் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக அமீரக காங்கிரஸ் பணிகளை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல பழைய நிர்வாகிகள் சிலருக்கு புதிய பொறுப்புக்களையும், புதியவர்களை நிர்வாகிகளாக நியமிக்க முடிவும் செய்தனர். அதன்படி, பொருளாளராக பதவி வகித்த கீழை ஜமீல் முஹம்மதை பொதுச் செயலாளராகவும், துணைத் தலைவராக பதவி வகித்த ஜெஹன் அவர்களை பொருளாளராகவும், செயலாளராக பதவி வகித்த அப்துல் காதர் ஜெய்லானியை துணைத் தலைவராகவும் நியமிக்க செயற்குழு ஏக மனதாக ஒப்புக் கொண்டது. அதன் அடிப்படையில் இனி முதல் திரு.ஜமீல் முஹம்மது - பொதுச் செயலாளர் திரு.ஜெஹன் - பொருளாளர் திரு.அப்துல் காதர் ஜெய்லானி - துணைத் தலைவர் ஆகிய பொறுப்புக்களை வகிப்பார்கள். கூடுதலாக ஊடகத்துறை பொறுப்பையும் சகோதரர் கீழை ஜமீல் முஹம்மது நெல்லை சிந்தா அவர்களுடன் கவனித்து கொள்வார். புதிய நிர்வாகிகளாக கீழ்காணும் சகோதரர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். 1) தென்றல் ஹமீது - செயலாளர் 2) மணிலா ஹாஜா - செயலாளர் 3) ஹைதர் நஸீர் - செயலாளர் 4) ஷாஹுல் ஹமீது - செயலாளர் 5) முஸ்தஃபா முஸ்தாக் - செயலாளர் 6) அகஸ்டீன் - துணைச் செயலாளர் 7) திவான் - துணைச் செயலாளர் 8) நிஸாத் மேத்தல் - துணைச் செயலாளர் 9) அப்துர் ரஹ்மான் - துணைச் செயலாளர் 10) ஹக்குல் முத்தலீக் - இணைச் செயலாளர் 11) அருண் - இணைச் செயலாளர் 12) முஹம்மது கனி - இணைச் செயலாளர் 13) ஸ்டீபன் - இணைச் செயலாளர் 14) அபீத் துல்கர் - இணைச் செயலாளர் 15) யூனூஸ் - இணைச் செயலாளர் இறுதியாக கீழ்க்கண்ட விடயங்களை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. 1) இந்திய மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம் ஒருதலை பட்சமானது என கண்டனம் செய்யப்பட்டது. அதை திரும்ப பெற வலியுறுத்தப்பட்டது. 2) பாஸிஸ பா.ஜ.கவின் துணை ஆளுநர் கிரண்பேடியின் அத்துமீறலை சிறிதும் பொருட்படுத்தாமல் மிக தைரியத்துடன் CAA NRC NPR க்கு எதிராக புதுவை சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த திரு.நாராயணசாமி அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 3) CAA NRC NPR க்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த பஞ்சாப், ம.பி, ராஜஸ்தான், சட்டீஸ்கர் உள்ளிட்ட காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுக்கும் மே.வங்கம் மற்றும் நம் பக்கத்து மாநிலம் கேரளா முதல்வர் திரு.பிணாரயி விஜயன் அவர்களுக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. 4) பிரமாண்ட முறையில் பேரணி நடத்தி தனது எதிர்ப்பை பலமாக பதிவு செய்த நம் எதிர்கட்சி தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 5) கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை திட்டமிட்டு பாஸிஸ சங்பரிவார் கும்பல்களால் நடத்தப்பட்ட முஸ்லிம் இனப்படுகொலையை வன்மையாக இந்த செயற்குழு கண்டிக்கிறது. 42க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறது. மேற்கொண்டு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இறுதியாக அருமையான விருந்து ஒன்றை தலைவர் அப்துல் மாலிக் ஏற்பாடு செய்திருந்தார். மகிழ்வு பொங்க அனைவரும் விடை பெற்றனர்.

Muduvai Hidayath