ஷார்ஜாவில் ரத்ததான முகாம்

Image



ஷார்ஜா : ஷார்ஜா இந்திய சங்கத்தில் இந்திய சுதந்திர தின விழாவையொட்டி ரத்ததான முகாம் நடந்தது.

இந்த முகாமை இந்திய சங்க தலைவர் ஜான்சன் தொடங்கி வைத்தார்.

இந்த முகாமில் தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் ரத்ததானம் செய்தனர்.

இந்திய சங்க குழுவினர் தேவையான ஏற்பாடுகளை சிறப்புடன் செய்திருந்தனர்.