வணிகவியல் (கணிப்பொறி பயன்பாடு) மன்ற நிறைவு விழா

Image



சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, முதுகலை வணிகவியல் (கணிப்பொறி பயன்பாடு) துறை சார்பாக 22.04.2023 அன்று வணிகவியல் (கணிப்பொறி பயன்பாடு) மன்ற நிறைவு விழா நடைபெற்றது.

துறைத்தலைவர் நாசர் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக கீழக்கரை, முகம்மது சதக் பொறியியல் கல்லூரி, மேலாண்மை துறைத்தலைவர், அப்பாஸ் மாலிக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இயற்பியல்துறை தலைவர் முஸ்தாக் அஹமது கான் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்வில் இருக்கல்லூரி துறைகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. பல்கலைக்கழக தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

நிகழ்வினை துறைசார் பேராசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.