டாக்டர் சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி-இளையான்குடி 12வது ஆண்டு விழா

Imageசிவகங்கை மாவட்டம் இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரியில் 12ஆம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா 13.05.2024 அன்று காலை வெகு சிறப்பாக கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டது.

சிறப்பு விருந்தினராக பெரும் மதிப்பிற்குரிய போற்றுதலுக்குரிய முனைவர் B.அசோக்குமார் அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்விஒருங்கிணைப்பாளர் (சிவகங்கை மாவட்டம்) மற்றும் டாக்டர் சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரியின் தலைவர், செயலர் ஜனாப் V.M ஜபருல்லாகான், பொருளாளர், ஆட்சி குழு உறுப்பினர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஜனாப்.Dr.A.சபினுல்லாகான், கல்வியியல் கல்லூரியின் முதல்வர் ஜனாப் M.M. முகமது முஸ்தபா,கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் ஜனாப்.S.E.A ஜபருல்லாகான்,இருபால் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவ ஆசிரியர்களும் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்.

இறுதியில் இனிப்புகள் வழங்கப்பட்டு நாட்டுப் பண் முழங்க இனிதே இவ்விழா நிறைவு பெற்றது.