போதைப்பொருள் பயன்படுத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு

Imageசிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் கல்லூரி போதைப்பொருள் பயன்பாடு எதிர்ப்பு கழகம் சார்பாக 26.06.2024 அன்று போதைப்பொருள் பயன்படுத்தலுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

போதைப்பொருள் பயன்பாடு எதிர்ப்பு கழக இணை ஒருங்கிணைப்பாளர் நாசர் வரவேற்று, உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் கனகராஜ், போதைப்பொருள் பயன்படுத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இறுதியாக போதைப்பொருள் பயன்பாடு எதிர்ப்பு கழக ஒருங்கிணைப்பாளர் காளிதாசன் நன்றி கூறினார்.

நிகழ்வில் 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். *