மாணவர்களுக்கு வழிகாட்டும் பயிற்சி

Imageசிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, முதலாமாண்டு மாணவர்களுக்கு வழிகாட்டும் பயிற்சி 05.07.2024 அன்று நடைபெற்றது.

கல்லூரி சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் சபினுல்லாகான் வரவேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார்.

கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் ஹமீத் தாவூத், கல்வியியல் கல்லூரி முதல்வர் முஹம்மது முஸ்தபா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்வில் தங்கம்மாள் ரஹீம் அறக்கட்டளை நிறுவனரும் சட்டக்களம் பத்திரிக்கை ஆசிரியருமான முஹம்மது அலி ஜின்னா அவர்கள் கல்லூரிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி இலவசமாக வழங்கி பேசினார்.

கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் கல்லூரி விதிமுறைகள் குறித்து பேசினார். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தேவிப்பட்டினம், விவேகானந்தா வித்யாலயா பள்ளி, முதல்வர், கல்வியலாளர் தீனதயாளன் உயர்கல்வி பயில்வதின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

இறுதியாக ஆங்கிலத்துறை தலைவர் ஷர்மிளா பானு நன்றி கூறினார். நிகழ்வில் கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள் நசீர் கான், உஸ்மான் அலி, அப்துல் சலீம், அபூபக்கர் சித்திக், சீராஜுதீன் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்வினை தமிழ்துறைத்தலைவர் அப்துல் ரஹீம் நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.