துபாயில் தமிழ் அமைப்பின் தலைவரிடம் வாழ்த்து பெற்ற வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான சட்ட ஆலோசகர்

Imageதுபாய் : துபாயில் அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகரை தமிழக அரசின் சார்பில் துபாய் நகரில் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான சட்ட ஆலோசகராக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்ட வழக்கறிஞர் ஹேமஸ்ரி சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அப்போது பேசிய டாக்டர் பால் பிரபாகர், துபாய் நகரில் தொழிலாளர்கள் சிலர் ஒரு சில நிறுவனங்களில் சம்பளம் வழங்கப்படாதது உள்ளிட்ட பல்வேறு சட்ட ரீதியான பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். இது போன்ற சமயங்களில் அவர்களுக்கு வேறு மொழி தெரியாத காரணத்தால் பிற வழக்கறிஞர்களை அணுகுவதில் சிரமம் ஏற்படுகிறது.

தமிழக அரசு துபாய் நகரில் புதிதாக சட்ட ஆலோசகரை நியமித்திருப்பதன் மூலம் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் வெகுவாக குறைய உதவியாக இருக்கும். இந்த பணிகளுக்கு அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பு தேவையான ஒத்துழைப்புகளை வழங்கும் என்றார்.

அப்போது சமூக ஆர்வலர் மிராக்கிள் உடன் இருந்தார்.