அஜ்மானில் இந்திய சுதந்திர தின விழா உற்சாக கொண்டாட்டம்

Image



அஜ்மான் : அஜ்மான் இந்தியன் அசோஷியேசனில் இந்தியாவின் 78வது சுதந்திர தின விழா மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

இந்த விழாவுக்கு இந்திய சங்க தலைவர் அப்துல் சலா தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ரூப் சித்து வரவேற்புரை நிகழ்த்தினார்.

இந்திய துணை தூதரக அதிகாரி தது மமு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் இந்திய ஜனாதிபதியின் சுதந்திர தின உரையின் முக்கிய பகுதியை வாசித்தார்.

இந்தியாவின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

இந்த விழாவில் பஹ்ரைன் லைட்ஸ் ஆஃப் கைண்ட்னெஸ் அமைப்பின் நிறுவனர் செய்யது ஹனீஃப், ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், அபுல் பைஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சங்க நிர்வாகக் குழுவை சேர்ந்த சாயாதேவி உள்ளிட்டோர் விழாவுக்கான ஏற்பாடுகளை சிறப்புடன் செய்திருந்தனர்.