முன்னாள் மாணவர்கள் நடத்திய கால்பந்து போட்டி
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் 28.08.2024 மற்றும் 29.08.2024 ஆகிய இரண்டு நாட்கள் கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கால்பந்து போட்டி நடைபெற்றது.
போட்டியினை கல்லூரி செயலர் ஜபருல்லாகான் முன்னிலையில் துபாய், அல்ரீம் நிறுவன குழும தலைவர், அபுதாஹிர் போட்டியினை துவக்கிவைத்தார். காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக இணைவு பெற்ற 11 கல்லூரிகள் கலந்துகொண்ட இப்போட்டியில் காரைக்குடி, வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி முதலிடத்தையும், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி முன்னாள் மாணவர் அணி இரண்டாம் இடத்தையும், இராமநாதபுரம், செய்யது அம்மாள் கல்லூரி அணி மூன்றாம் இடத்தையும், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி அணி நான்காம் இடத்தையும் பெற்றனர்.
காரைக்குடி, வித்யாகிரி கல்லூரி அணியின் காளீஸ்வரன், டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி அணியை சார்ந்த முகமது பாரிஸ் மற்றும் ஸ்டீபன் ஆகியோர் சிறந்த ஆட்டக்காரர்களுக்கான பரிசை பெற்றனர்.
இறுதியில் சிவகங்கை மாவட்ட கால்பந்து மூத்த பயிற்சியாளர் சிக்கந்தர், விருதுநகர் மாவட்டத்தின் கால்பந்து பயிற்சியாளர் செந்தில் குமார், இளையான்குடி, ஸ்டார் முஸ்லீம் கால்பந்தாட்ட குழுவின் முன்னாள் வீரர் ஹைதர், கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முகம்மது முஸ்தபா சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையில் பரிசுகளை வழங்கினர். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கல்லூரி முன்னாள் கால்பந்தாட்ட வீரர்களுடன் இணைந்து, உடற்கல்வி இயக்குனர் காளிதாசன், காஜா நஜ்முதீன் மற்றும் வெற்றி ஆகியோர் செய்திருந்தனர்.