துபாயில் இருந்து பாகிஸ்தானில் நடக்க இருக்கும் சர்வதேச மாநாட்டில் பங்கேற்கும் தமிழக பேராசிரியர்
துபாய் : துபாய் நகரில் உள்ள ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த கர்டின் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சித்துறை இயக்குநராக இருப்பவர் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் சித்திரை பொன் செல்வன்.
பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை நடக்க இருக்கும் சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டில் தமிழக பேராசிரியர் பங்கேற்று சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்த இருக்கிறார்.
இவர் சர்வதேச அளவில் பிளாஸ்டிக்கின் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. தமிழக பேராசிரியர் பாகிஸ்தானில் நடக்க இருக்கும் மாநாட்டில் பங்கேற்று ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாநாட்டில் பங்கேற்க இருக்கும் தமிழக பேராசிரியருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.