தூய்மை இந்தியா உறுதிமொழி ஏற்பு
கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக 25.09.2024 அன்று தூய்மை இந்தியா உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையேற்றார். கல்லூரி சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் சபினுல்லாகான் தூய்மை இந்தியா உறுதிமொழி வாசிக்க மாணவ-மாணவியர் உறுதிமொழி ஏற்றனர்.
நிகழ்வினை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் அப்ரோஸ், சேக் அப்துல்லா, பாத்திமா கனி மற்றும் முகம்மது பாத்திமா ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.