துபாய் டிவைன் பிளாக் மஜ்லிசில் நடந்த மீலாதுப் பெருவிழா
துபாய் : துபாய் டிவைன் பிளாக் மஜ்லிசின் சார்பில் மீலாதுப் பெருவிழா இணையவழியில் நடந்தது.
இந்த விழாவுக்கு கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளையின் தலைவர் முனைவர் ஆ. முகமது முகைதீன் தலைமை வகித்தார்.
திண்டுக்கல் ஜமால் முஹைதீன் இறைவசனங்களை ஓதி நிகழ்வினை தொடங்கி வைத்தார்.
முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூப் ‘மாமறை போற்றும் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
தமிழ் பிறை தொலைக்காட்சியின் நிறுவனர் காயல் இளவரசு, அபுதாபி அய்மான் சங்கத்தின் நிர்வாக செயலாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர், காயல் லெப்பை தம்பி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சமூக ஆர்வலர் முதுவை ஹிதாயத், அஹமது ஜலால், மீரான் ஃபைஜி, ஜாபர், முஹம்மது சலீம், இலங்கை நிஸ்தர் ஆலிம், சுபையிர் அஹில் முஹம்மது உள்ளிட்ட குழுவின்ர் சிறப்புடன் செய்திருந்தனர்.