தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் 120 ஆவது பிறந்த தின விழா
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நவீன் பைன் ஆர்ட்ஸ் சார்பாக தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் 120 ஆவது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.
சேவைத் திலகம் சிராஜ்தீன் தலைமையில் சி.பா.ஆதித்தனார் அவர்களின் திரு உருவப் படத்தை இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் திறந்து வைத்தார்.
நடிகர் விஜய் அவர்களின் தாயார் திருமதி ஷோபா சந்திரசேகர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
காயல் ஆர்.எஸ். இளவரசு, சிவாஜி ரவி, பின்னணி பாடகி ஜீவ வர்ஷினி, பாடகர் சார்லஸ் ரவி கோவலன் விஜயன் மற்றும் பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியை பன்னீர்செல்வம் ஏற்பாடு செய்திருந்தார்