துபாயில் நடந்த போட்டியில் முதல் பரிசு பெற்ற தமிழக மாணவி : தமிழக அமைச்சர் பாராட்டு
துபாய் : துபாய் ஜிடெக் தொழில்நுட்ப கண்காட்சியையொட்டி எதிர்கால தொழில்துறையில் பயன்படுவதற்கான சிறந்த யோசனை வழங்கும் போட்டி நடந்தது.
அதில் துபாயின் ஹெரியட்வாட் கல்லூரியில் பயின்றுவரும் தமிழக மாணவி ஸ்வப்னா மணிகண்டன் முதல் பரிசு வென்றார்.
யுனிப்ரோனியர் நிறுவன முதன்மை இயக்குனர் முகமது முக்தர் ஜஹாங்கிர் விருதினை வழங்கினார்.
தமிழக தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் திரு. பழனிவேல் தியாகராஜன் அவர்கள் நேரில் சந்தித்து தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.