மீலாது நபி விழாவை முன்னிட்டு மாநிலம் தழுவிய அளவில் பேச்சு போட்டி

Image



இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாணவர் அமைப்பான முஸ்லிம் மாணவர் பேரவை சார்பில் மாபெரும் பேச்சு போட்டி தமிழகம் தழுவிய அளவில் மண்டல வாரியாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தஞ்சை மண்டல அளவிலான முதல் நிலை பேச்சு போட்டி மயிலாடுதுறை கிங்ஸ் பேலஸ் மண்டபத்தில் இன்று (16-11-2024) காலை நடைபெற்றது. மாணவரணி மாநில செயலாளர் ஆடுதுறை ஷபீக் அகமது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அய்மான் அகமது கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அமீர் நூருல்லாஹ், மாவட்ட செயலாளர் ஷபீர் அகமது, இளைஞரணி மாநில அமைப்புக்குழு உறுப்பினர் அபு பாரிஸ், மாவட்ட பொருளாளர் முஹம்மது யூசுப், மாநில கௌரவ ஆலோசகர் சிட்டிசன் அப்துல் மஜீத் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மயிலாடுதுறை மாவட்ட மாணவரணி தலைவர் அப்துல் கரீம் வரவேற்புரை ஆற்றினார்.

மாநில செயலாளர் ஆடுதுறை ஷாஜஹான் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். மயிலாடுதுறை மாவட்ட அரசு காஜியும், நீடூர் JMH அரபிக் கல்லூரியின் முதல்வர் மௌலானா முப்தி முஹம்மது இஸ்மாயில் பாகவி ஹஜ்ரத் அவர்கள் போட்டியை தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். ஜமாஅத்துல் உலமா சபையின் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் மௌலானா ஷாஹூல் ஹமீது ஹஜ்ரத் அவர்கள், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் ராஜேந்திரன் அவர்கள், நல்லாசிரியர் ரஷீத் ஜான் ஆகியோர் நடுவர்களாக இருந்து போட்டியாளர்களை தேர்வு செய்தனர். போட்டியில் 25க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பங்கேற்று சிறப்பாக உரையாற்றினர்.

அதிராம்பட்டினம் ஷேக் உமர், கும்பகோணம் முகம்மது அஷ்ரப் மஹதி, கிளியனூர் அஃப்சினா, உமைரா அர்சத் ஆகிய 4 மாணவர்கள் மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், பங்கேற்றவர்களுக்கும் பாராட்டு சான்றுகள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. மண்டல வாரியாக தேர்வு செய்யப்பட்டவர்கள் இன்ஷா அல்லாஹ் அடுத்த மாதம் சென்னையில் நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் பங்கேற்பர். இறுதி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கத் தொகையும், சான்றிதழும் வழங்கப்படும்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் திருச்சம்பள்ளி அப்துல் ஹக், மயிலாடுதுறை நகர பொருளாளர் ஹலீல் ரஹ்மான், இளைஞரணி மாவட்ட தலைவர் கொள்ளிடம் அப்துல் காதர், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட தலைவர் ஆயப்பாடி ஹாஜா நஜிமுதீன், இளைஞர் அணி மாவட்ட துணைத் தலைவர் செய்யது நூருல்லாஹ், மாணவரணி மாவட்ட பொருளாளர் ஆயப்பாடி ரிபாயி எஸ்.டி.யூ. தலைவர் உபயத்துல்லாஹ் ஹஜ்ரத், கிளியனூர் பிரைமரி தலைவர் அமானுல்லாஹ், சீர்காழி நகர தலைவர் அப்துல் ரஹீம், நகர செயலாளர் கமர்தீன் உள்ளிட்ட பல்வேறு பிரைமரி மற்றும் அணிகளின் நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பித்தனர். மயிலாடுதுறை மாவட்ட துணை செயலாளர் அக்பர் நன்றியுரை ஆற்றினார்.