முஸ்லிம் மாணவர் பேரவை சார்பாக மதுரை மண்டலத்தில் நபிகள் நாயகம் ஸல் மீலாது நபி விழா பேச்சு போட்டி
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவர்அணி
முஸ்லிம் மாணவர் பேரவை சார்பில் பேச்சு போட்டி தமிழகம் தழுவிய அளவில் மண்டல வாரியாக நடைபெற்று வருகிறது. மதுரை மண்டலத்தில் கடந்த 23.11.2024 சனிக்கிழமை நெல்பேட்டை காயிதேமில்லத் நகர் ஆதம் பாவா மன்ஜிலில் நடைபெற்றது.
மாணவரணி மாநில செயலாளர் மதுரை ஜெ.அஜிசுல்ஹக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் JMS அரபிக்கல்லூரி மாணவர் கிராத் ஓதினார். மாவட்ட துணைத்தலைவர் ஆசிக் முஸ்தபா முன்னிலை வகிக்க மாணவரணி மாவட்ட அமைப்பாளர் பி.சாருக்கான் வரவேற்புரையாற்றினார். மாவட்ட பொருளாளர் நெல்பேட்டை ஏ. ஜாகிர் உசேன் வாழ்த்துரை வழங்கினார்.மேலும்
மாவட்ட தலைவர் PKN அப்துல் காதர் ஆலிம், மதுரை மாவட்ட அரசு டவுன்காஜியார் சபூர் முகைதீன், மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் எம். பிஸ்மில்லாகான், மகளிரணி மாவட்ட செயலாளர் பேரா.எம்.பாத்திமா நிஷா ஆகியோர் நடுவர்களாக இருந்து வெற்றியாளர்களாக மதுரை வரிச்சியூர்JMS அரபிக்கல்லூர் மாணவர் முஹம்மது அய்யூப், தேனி மாவட்டம் பெரியகுளம்அஷ்ரத்து முபஷ்ஷரா அரபிக்கல்லூரி மாணவர் முக்சித் மீரான் திண்டுக்கல் அதாயி இல்லாமிய பெண்கள் கல்லூரி மாணவி ஸாகிரா பானு மதுரை சேது பொறியியல் கல்லூரி மாணவி லஃபிரா பதீன் ஆகிய நால்வரை மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்து மெடல்,சான்றிதழ், மற்றும் நினைவு கேடயம் வழங்கினர். சிறப்பு அழைப்பாளர்களாக இளைஞர் அணி தேசிய செயலாளர் ரா.முகமது இலியாஸ் எம்.சி, மாநில செயலாளர் அவ்தா காதர், மாவட்ட செயலாளர் இக்பால் பாஷா, வடக்கு மாவட்ட தலைவர் டாக்டர் ஏ.கே.முகைதீன், பொருளாளர் சேக் செய்யது அலி, துணைதலைவர் Er. A. ஜாகிர் உசேன்,துணை செயலாளர்கள் சோழா.இஸ்மாயில் கான், கேபிள் ஐ.சாகுல் ஹமீது, 49 வது வார்டு செயலாளர் எஸ்.புரோஸ் கான்,திமுக சிறுபாண்மை நல உரிமை பிரிவு மாவட்ட அமைப்பாளர் உஸ்மான் அலி,மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் பொருளாளர் NSM அப்துல்காதர்,சுங்கம் பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகள் MRT.ஹாஜி.S. காஜாநஜ்முதீன், ஹாஜி.M.முஹம்மது நஜ்முதீன்,ஹாஜி.N.முகமது யாசின் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் சமூக ஆர்வலர் RTI.K. ஹக்கீம் அவர்கள் எழுதிய தகவல்அறியும் உரிமை சட்டம் எனும் நூல் கல்லூரி மற்றும் மதரஸா மாணவர்களுக்கு வழங்கபட்டது.நிறைவாக மாணவரணி மாவட்ட துணை அமைப்பாளர் அஜிசுர்ரகுமான் நன்றி கூறினார்.