போர்வை தானம் நிகழ்ச்சி

Image



இறைவனின் பேரருளால் நமது Green Globe சார்பில் Emirates Red Crescent அஜ்மான் சென்டர் அனுமதியுடன் இணைந்து நடத்திய ‘Blanket Donation Drive’ போர்வை தானம் நிகழ்ச்சி 08.02.2025 தேதியன்று அஜ்மான் Labour Camp ல் வெகு சிறப்பாக நடைபெற்றது.

அமீரகத்தில் இவ்வருடம் வாட்டுகின்ற கடும் குளிரை கருத்தில் கொண்டு நலிவுற்ற 300 ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான போர்வைகளும் கேக், பழங்கள் மற்றும் குளிர்பானங்கள் அடங்கிய (Snacks Box) உணவுப் பொட்டலங்களும் வழங்கப்பட்டது.

அஜ்மான் Emirates Red Crescent அமைப்பின் உயர் அதிகாரி மதிப்பிற்குரிய ஷேக் முஹம்மது முதீர் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று நமது Green Globe செய்து வரும் சமூக சேவைகளை மனமுவந்து பாராட்டினார். போர்வை தானம் உதவி செய்ய முன்வந்த நல்லுள்ளங்களுக்கும் மேலும் உற்சாகத்துடன் இந்நிகழ்வில் பங்குபெற்று சேவையாற்றிய பள்ளி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் Green Globe சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

“Give a blanket, Get a warm feeling”