வணிகவியல் தேசிய கருத்தரங்கு

Image



சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல் துறை சார்பாக 12.02.2025 அன்று "செயற்கை நுண்ணறிவு - வணிகவியலில் நெறிமுறைகள் மற்றும் வெளிப்படைத்தன்மை" என்னும் தலைப்பில் தேசிய கருத்தரங்கு நடைபெற்ற்றது. துவக்க விழாவில் துறைத்தலைவர் முனைவர் K. நைனா முகம்மது வரவேற்றார். கல்லூரி முதல்வர் திரு. S.E.A. ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். சிறப்புவிருந்தினர்கள் வாழ்த்துரை வழங்கினர். உதவிப்பேராசிரியர் முனைவர் P. ஜாஹிர் ஹுசைன் நன்றி கூறினார்.

முதல் அமர்வில் உதவிப்பேராசிரியை முனைவர் M. பௌசியா சுல்தானா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக காரைக்கால், பாண்டிச்சேரி காரைக்கால் வளாகம், வணிகவியல்துறை, பேராசிரியர் முனைவர் S. அமிலன் அவர்கள் கலந்துகொண்டு செயற்கை நுண்ணறிவில் நெறிமுறை சிந்தனைகள் குறித்து பேசினார். முதல் அமர்வை உதவிப்பேராசிரியர் முனைவர் S. நஷீர் கான் ஒருங்கிணைத்தார்.

இரண்டாம் அமர்வில் சிறப்புவிருந்தினரை உதவிப்பேராசிரியர் முனைவர் S.A. ஷம்சுதீன் இப்ராஹிம் அறிமுகம் செய்தார். சிறப்புவிருந்தினராக திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், வணிகவியல் மற்றும் நிதி ஆய்வுகள் துறை, துறைத்தலைவர், பேராசிரியர் முனைவர் S. வனிதா அவர்கள் கலந்துகொண்டு நவீன வணிகத்தில் செயற்கை நுண்ணறிவின் முன்னேற்றங்கள் குறித்து பேசினார். இரண்டாம் அமர்வை உதவிப்பேராசிரியர் முனைவர் S. நாசர் ஒருங்கிணைத்தார்.

நிறைவு விழாவில் உதவிப்பேராசிரியர் முனைவர் R. அப்துல் முத்தலிப் வரவேற்றார். கல்லூரி துணை முதல்வர் முனைவர் A. முஸ்தாக் அஹ்மத் கான் தலைமையுரையாற்றினார். சேலம், அரசு கல்லூரி, வணிகவியல் துறைத்தலைவர் மற்றும் இணைப்பேராசிரியர் முனைவர் M. செய்யது இப்ராஹிம் நிறைவு விழா உரை நிகழ்த்தினார். உதவிப்பேராசிரியை முனைவர் R. ,முஹம்மது பாத்திமா நன்றி கூறினார். நிகழ்வில் கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் ஜனாப் J. அபூபக்கர் சித்திக், கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் M.M. முஹம்மது முஸ்தபா உள்ளிட்ட பேராசிரியர்கள், துறைசார் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.